முடிந்தளவு உள்ளே சென்று முகாமின் சுவரோட மோதுவதுதான் நோக்கம்
“முடிந்தளவு உள்ளே சென்று முகாமின் சுவரோட மோதுவதுதான் நோக்கம் ” மேஜர் டாம்போ 19.03.1991.
“நான் திறம்பி வரமாட்டேன். என்னால முடிந்தளவு உள்ளே சென்று முகாமின் சுவரோட மோதுவதுதான் நோக்கம்.”
சிலாவத்துறை இராணுவ முகாம் மீதானா தாக்குதலுக்குப் போராளிகள் தயாராகிக் கொண்டிருந்த போது தனது நண்பனொருவனிடம் டாம்போ இப்படித்தான் சொன்னான்….…
அந்த இரவும் வந்தது.
சிலாவத்துறை இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது. சில மணித்துளிகளில், உதவி அரசாங்க அதிபர் விடுதி இருந்த சிறிய இராணுவ முகாம் விடுதலைப்புலிகளிடம் விழ்ட்சியடைந்தது.
அந்தப் பக்கமாக இருந்த கொண்டச்சி வீதியால் தான், வெடிமருந்து நிரப்பப்பட்ட வண்டி இராணுவ முகாமினுள் செல்வதெனத் தீர்மானிக்கப்படாது.
வண்டி செல்வதற்காக, போராளிகள் வீதியைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இடை நேரத்திலும் டாம்போ, தாக்குதலின் பொழுது காயமடைந்த போராளிகளைத் தூக்கி வருவதிலும்; சிகிட்சையளிப்பதிலும் ஈடுபட்டிருந்தான்.
வண்டி செலவதற்குரிய நேரம் வந்தது. டாம்போ வெடிமருந்து வண்டியின் அருகில் வந்தான். பக்கத்தில் நின்ற தோழனை இருக்க அனைத்து முத்தமிட்டான்.
“நானும் கொஞ்சத்தூரம் வாறன்” என்றான் அந்தத் தோழன். “வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணாக எல்லோரும் சாவான்.….” என்று சொல்லியபடி, வண்டியில் ஏறி இயக்கினான் டாம்போ.
வண்டியின் அருகே ஓடிவந்தபடியே “விட்டு விட்டு ஓடிவரலாம் தானே” என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் ஒரு தோழன்.
வெடிமருந்து வண்டி உறுமிக்கொண்டு இராணுவ முகாமைத்தேடி ஓடியது. அந்த வண்டியை நோக்கி இராணுவத்தினரின் முழு ஆயுதங்களும் குறிவைத்து இயங்கின. குறித்த இலக்கிற்கு முன்பே அந்த வண்டி வேண்டி வெடித்து சிதறியது.
ஒளிப்பிழம்புடன் கரும்புகையோன்று வானில் எழுந்து கலந்தது. கடற்கரைகளில், வயல் வெளிகளில், தூரத்துக் காட்டின் ஓரங்களில் நின்ற போராளிகளின் நெஞ்சங்க்களை வெடியோசை பாரமாக அழுத்தியது. அவர்கள் நேசித்த டாம்போவின் வீரச்சாவுச் செய்தியை அந்தச் சத்தம் காதோடு வந்து சொல்லிச் சென்றது.
– உயிராயுதம் பாகம் 1லிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”