கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்
கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன், கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் வீரவணக்க நாள் இன்றாகும்.
மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்…………
நிழலாடும் நினைவுகள்………………..
சிறிலங்கா கடற்படையின் ஒரு கப்பல் தளபதியை, தமிழீழக் கடற்படையின் ஒரு பெண் தளபதி சிறைப்பிடித்தாள். அவர் உயிரைக் காக்க சரணடைந்தார். இவள் வெற்றியைப் பெற உயிர் துறந்தாள்.
– தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கடற்புலி மகளிர் சிறப்புத் தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி அவர்கள் பற்றி விபரிக்கையில்…………
“சாகரவர்த்தனா” போர்க்கப்பலில் கைப்பற்றபப்ட்ட ஆயுதங்களைப் பார்வையிடும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்……….
நீளும் நினைவுகளில் என்றும்…….
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”