கடமை
தற்பாதுகாப்பு பயிற்சி முடித்து கொண்டு மைதானத்தை விஒட்டு அவர்கள் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். பல்வேறு வயதினர் வேறுபட்ட தோற்றம் கொண்டவர்கள்.
தெருவில் நின்ற சில இளைஞர்கள் அவர்களை வேடிக்கை பார்த்தார்கள். கைகளில் அநியாய விலைக்கு வாங்கிய சிகரெட்டுக்கள் புகைத்துக்கொண்டிருந்தன. கண்களில் சிவப்பு.
“எட ஒரு ‘நைன்டி’யும் ரெயினிங் எடுக்குது மச்சான்” என்றான். அவர்களில் ஒருவன்.
அவனால் நைன்டி என்று சுட்டிக்காட்டப்பட்டவருக்கு அந்த வார்த்தைகள் காதில் விழுந்திருக்க வேண்டும். அவர் அந்த இளைஞர்களை நோக்கி நடந்துவந்தார். நரைத்த தலையுடன் முதுமை களை கட்டியிருந்தது.
தம்பியவை எனக்கு இன்னும் தொண்ணூறு ஆகேல்லை. இப்பதான் அறுபது வயது எனக்கு உங்களைப் போல ஒரு பெடியன் இருக்கிறான். அவனும் உங்களைப் போலதான் றோட்டு அளக்கிறான். என்ன செய்ய குடும்பத்தில் கடைசி ஒருத்தராவது போராட்டத்தில் சேரவேண்டும் எண்டதுக்காக வெளிக்கிட்டு இருக்கிறன். கடைசி என்னைப் பார்த்திட்டாவது அவன் திருந்தட்டும் என்றால் உங்களைப் போல ஆக்களுக்கு இதுகள் பகிடியாகத்தான் இருக்கும்.
உணர்வுகளுடன்:- அயக்கிரீவன்.
எரிமலை ஐப்பசி 1993 இதழிலிருந்து தேசக்காற்று.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”