அன்றைய நினைவோடு திறந்த இன்றைய வெற்றிக்க் களம்!
அன்றைய நினைவோடு திறந்த இன்றைய வெற்றிக்க் களம்!
1990ம் ஆண்டு ஆவணி 25ம் நாள்.
யாழ்ப்பாணக் கோட்டையில் சிக்கியிருந்த தனது சிப்பாய்களைக் காக்க சிங்களப்படை மண்டைதீவை நோக்கி முன்னேறியது; தடுக்கும் ஆபத்தான ஒரு முயற்சியில் புலி வீரர்கள் சண்டையிட்டனர்.
சுற்றிவரக் கடல். வெட்டி வெளித் தரை. நாற்புறமும் சூழ்ந்து தாக்கிய பகைவனோடு நடந்த அந்தச் சண்டை துயரமானது.
அது நடந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர்….
1995ம் ஆண்டு ஆனி 25ம் நாள்.
அன்றைய நினைவுகளைச் சுமந்தபடி……….
யாழ்ப்பாணக் கடலைக் கடந்து நகர்ந்த புலிவீரர்கள், மாண்டைதீவு சிங்களத் தளத்தினுள் பூகம்பத்தை விளைவித்தனர்.
யாழ். மாவட்டத் தாக்குதற் பிரிவு, வன்னி மாவட்டத் தாக்குதற் பிரிவு, கடற்புலிகளின் தாக்குதற் பிரிவு, மகளிர் படைத் தாக்குதற் பிரிவு ஆகியவற்றின் தளபதிகள் அணிகளை நடத்திச் செல்ல,
தேசியத் தலைவர் பிரபாகரனின் நெறிப்படுத்தலின் கீழ்….
தளபதிகள் சொர்ணம், சூசை ஆகியோரின் துணையோடு, தளபதி பானு ஒட்டுமொத்தமான தாக்குதல் திட்டத்தை வழி நடத்தினார்.
அன்று எங்கள் வீரர்களைச் சுற்றிவளைத்து வீழ்த்திய அதே நிலத்தில் 120 சிங்களப் படையினர் பிணங்களாய் சுருண்டனர்.
300ற்கும் மேலான சுடு கருவிகளையும், 2 இலட்சத்திற்கு அதிகமான ரவைகள், வெடிபொருட்களுடன் ஏராளமான படை உபகரணங்களையும் விட்டு வெளியேறினர்.
கடற்புலிகள் தாக்குதலணியின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான லெப். கேணல் சூட்டியும் இன்னும் ஒன்பது புலிவீரர்களும் இந்த வெற்றிச் சமரில் களப்பலியாகினர்.
மண்டைதீவுப் படைத்தளமானது, அதன் மீது பெருமெடுப்பிலான ஒரு தாக்குதலை நடாத்த முடியாத புவியியல் அமைப்பையே கொண்டிருக்கின்றது. நாற்புறமும் கடலால் சூழப்பட்ட, வெட்டைத் தரையான ஒரு தீவே அதுவாகும். அத்தோடு,
நூற்றுக்கணக்கான காவல் நிலையங்களையும், விசேட கடல் கண்காணிப்புக் கோபுரங்களையும் கொண்டு ஒரு பிரதான முகாமிலும் 3 உப முகாங்களிலும் நிலைகொண்டிருந்த படையினருக்குள் – பல நூற்றுக்கணக்கான புலிவீரர்கள் வெற்றிகரமாக ஊடுருவித் தாக்குதலை நிகழ்த்திவிட்டு வெளியேறியமை, உலக இராணுவ வல்லுனர்களையே வியப்பில் ஆழ்த்தி விட்டது.
தாக்குதாளி நிகழ்த்திய புலிப் படையணிகள் உச்சிப் பகற் பொழுதிலேயே நீரேரி கடந்து மீண்டும் சென்றதைத் தடுக்க முடியாது, சிங்கள முப்படைகளும் பரிதவித்து நின்ற நிலை சிங்களப் பேரினவாதத் தலைமையைத் தலைகுனியச் செய்து விட்டது.
எரிமலை (புரட்டாதி 1995) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”