தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கடற்சமரில் ஓர் தளபதியின் தெரிவு …
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கடற்சமரில் ஓர் தளபதியின் “கட்டளை அதிகாரியின்” தெரிவு ….
ஒரு நாட்டின் எல்லை என தரையில் இருப்பது வழமை, அப்படியாக கடலும் பரந்து நீண்டு கிடக்கிறது…
ஒரு நாட்டின் கடற்பரப்பு சராசரி 300 கடல்மைல் (NM) தரையில் ( 3.0 × 10 – 10 கிலோ மிற்றர் ) கொண்டதாக அமையும் ஆனால் தமிழீழத்தில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட போதும் 25 கடல்மைல் கொண்டதாக இருந்தது.
நாளும் குறுகிய கடற்பரப்பை “புவியல் ரீதியாக தமிழீழத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து எமது கடலில் நாம் பலம் பெறும்போதுதான் விடுவிக்கப்படும் நிலப் பகுதியை நிரந்தரமாக நிலை நிறுத்திக் கொள்வதுடன் தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படையையும் விரட்டியடிக்க முடியும்.” என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக கடற்கரும்புலிகளும் கடற்புலிகளும் தம் உயிர்களைக் கொடுத்து பாதுகாத்து வந்தனர் இது என்றும் அழியாத வரலாறு.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஈருடகத் தாக்குதல் மற்றும் ஓயாத அலைகள் மூலம் வென்று எடுக்கப்பட்ட கடற்பிராந்தியம் அன்றுமுதல் சிங்கள இனவாதத்தின் பிடியிலிருந்து மீட்ட தமிழீழ மாவட்டங்களில் கடற்பிராந்திய வளையங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுபட்டில் மேற்குறிபிட்ட எல்லைவரை விரிவுபடுத்தப்பட்டு இருந்தது.
ஆனால்; தமிழீழ தேசத்தின் வளங்களையும், போரியலின் தேவைகளையும், மக்களின் அத்தியாவசியங்களையும் பூர்த்தி செய்யும் நோக்குடன் கடற்புலிகளின் கடமைகள் சற்று கடலின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டு ஆழக்கடலெங்கும் பரந்து விரிந்தது.
அப்படி ஓர் சம்பவத்தில்….
கடலில் எதிரியுண்டன் ஏற்படும் சண்டைகளின்போது களத்தில் துப்பாக்கிகள் சீறும் சன்னங்களை எண்ணிக்கொள்ள முடியாது. போராளிகள் சிங்கள வெறியனை எம் தேசத்திலிருந்து (கடலில்) விரட்டும் நோக்குடன் 1 ரவை பாய்ச்சினால், எதிரி உயிர் பயத்தில் 15 ரவை பொழிவான் இது களத்தில் நடக்கும் வழமை.
சற்று வளங்கள் அதிகம் இல்லாத போராட்ட வாழ்வின் நாட்களில் ஒரு வரலாற்று சமர் மூண்டது கடலில், பல மணி நேரம் அதாவது ஐந்து மணிநேரம் அந்த கடற்சமரில் டோறா முழ்கடிகபட்டு கடற்புலிப் போராளிகள் இருவரின் வீரகாவியத்துடன் வெற்றி பெற்று தளம் திரும்பின படகுகள்.
நிதர்சன களப்பிடிப்பு போராளிகளின் படக்கருவி கடற்சமரை பதிவு செய்தது.
அந்த தாக்குதலை தேசியத் தலைவர் பார்வையிட்டார். கடற்புலி சிறப்புத் தளபதியுடனும் மற்றும் சில தளபதிகள் போராளிகளுடனும்…
அதிலே சண்டை ஆரம்பித்த சில மணித்துளிகள் வரை நீடித்த சென்றுகொண்டிருந்த கடற்சமரில் மற்ற தளபதிகள் மூழ்கியிருக்க, திருப்பி முன்னுக்கு எடுக்குமாறு கட்டளை பிறந்தது.
அனைவரும் டோறா முழ்கும் வரை பார்த்து முடித்த பின்பு………
பின் அனைவரும் போராளிகளை பாராட்டி பேசினார்கள்.
அப்போது தலைவர் கூறினார் நான் அதில் ஒன்றை பார்த்தேன். எதிரியின் படகும் எங்களின் படகும் சிறு இடைவெளி தூரமிருக்க துப்பாக்கிகள் முழங்குகிறன. ஆனால் அதில் ஒரு போராளி தன் கையிலிருந்த AK – 47 துப்பாக்கியால் நிதானமாக பதற்றமில்லாமல் அந்த சூழ்நிலையிலும் குறிபார்த்து சூடுகிறான்.
எந்த சூழ்நிலையிலும் தயங்காமால் ஒரு இராணுவ வீரனுக்குரிய தன்னடக்கத்துடன், இருக்கும் ரவைகளை விரையம் செய்யாமல் களத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்குரிய வல்லமை தெரிகிறது அவனில் என்றாராம்.
மறுநாள் அப் போராளி கடற்புலிகளின் சண்டைப் படகுகளில் ஒரு படகிற்கு கட்டளை அதிகாரியாக செல்கிறான்..
பின்னாளில் அப் போராளியின் சாதனை நீள்கிறது கடல்தன்னில்.
பின்பு தமிழீழத்தின் தலைநகரின் கடற்புலிகளின் தளபதியாக செல்கிறான். அங்கும் திறம்பட கடமை நிறைவேற்றி பல கடமைகளை தன் தலையில் சுமந்து, பல பொறுப்புகளை வகித்து தாய்நாட்டிற்காக உழைக்கின்றான்.
பின்பு தலைமையின் மற்றும் சிறப்புத் தளபதியின் அனுமதியுடன் எங்கள் இசைப்பிரியாவை திருமணம் செய்கிறான் அவன் வேறு யாருமல்ல எங்கள் கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான சிறிராம் அவர்களே.
இந்தக் காவியம் என் ஆசான் கடற்புலிகளின் இயந்திரவியல் பொறுப்பாளர் லெப். கேணல் கடாபி அவர்கள் 2004ம் கூறியது…
நினைவுகளுடன்:- இசைவழுதி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”