கடற்கரும்புலி கப்டன் அறிவரசன், லெப். கேணல் நம்பி வீரவணக்க நாள்
கடற்கரும்புலி கப்டன் அறிவரசன், லெப். கேணல் நம்பி வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதம்………..
யாழ் மாவட்டம் கிளாலிக் கடல்நீரேரிப் பகுதியில் “ஓயாத அலைகள் 03″ நடவடிக்கையின் போது 30.12.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் நீருந்து விசைப்படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
உயிராயுதம் பாகம் 08ல் கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் அவர்களின் உயிரோட்டம் (1.08:20 – 1.12:45) வரை நீள்கின்றது. தற்சமயம் எமது தளத்தின் காணொளிப் பக்கத்தில் இணைக்கமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
|| தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கல்லறையில் உறங்கும் மாவீரம்…….
முல்லை மாவட்டம் மணலாறு பகுதியில் 30.12.2000 அன்று தவறுதலாக இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நம்பி (துசி) அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”