சமூக நீதிக்கு முதன்மை கொடுக்க வேண்டும்
எமது தேசிய இனத்தின் பண்பாட்டிற்கு அமையவும் மாறி வரும் உலகின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் எமது சட்டமுறை உருவாக்கப்பட வேண்டும். எமது தேசத்தை அடிமைப்படுத்திய அந்நியர்கள், எமது வாழ்க்கைமுறையில் மாற்றத்தை கொண்டு வர முயன்றார்கள். அவர்கள் கையில் பலம் இருந்தாலும் நாம் அடிமையாக வாழ்ந்தாலும் அவர்கள் தமது சட்டங்களையும் எம்மீது திணித்த வேளைகளில் நான் ஏற்றுக்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இப்பொழுது நாம் சொந்த பலத்தின் மூலம் எமது மண்ணை மீட்டு வருகின்றோம். ஆகையால் அமது தேசத்தில் எமக்கேற்ற சட்ட நிர்வாக ஒழுங்கை கட்டியமைத்து வருகின்ற வேளையில், தமிழீழ நீதி நிர்வாகத்துறை திறம்படச் செயற்பட்டு வருவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனினும் நீதி நிர்வாகத்துறை மேலும் விரிவாக்கம் செய்யப்படவேண்டும். போராளிகளாகிய நீங்கள் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் அடிமைப்படாது, சமூக நீதிகளுக்கு முதன்மை கொடுக்க வேண்டும்.
எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள், அநீதிகள் தொடர்ந்து ஆணாதிக்கக் கொடுமைகள் வளர்கின்றன. இந்தச் சமூக அநீதிகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்படுவதோடு, சீதனம் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகின்ற முறைகளும் சட்டத்தினால் நீக்கப்பட வேண்டும்.
(20.05.1995 அன்று தமிழீழ நீதிமன்றுகளின் நீதியாளர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றி நீதியாளர்கள், சட்டவாளர்கள் உறுதிப்பிரமாண நிகழ்வின்போது தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து………..)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”