இறுதி வணக்கம்….
உடலுக்கு எந்த அலுப்பையும் ஏற்படுத்தாது ஊர்தி வழுக்கிப் போய்க்கெண்டிருந்தது. இடையிடையே வீதியோரமாக காப்ரணிலிருந்து நீண்ட துப்பாக்கி முனைகளை அரைத்தென்னை உயர விளம்பரப் பலகைகளைக் கடந்தவாறு நெரிசலான வீதி வழியே சக்கரங்கள் விரைந்தன. பயணம் சுகமான பயணம் தான். மனம் தான் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது.
அடையாள அட்டையயைக் காட்டி பெயரைப் பதிவு செய்து ஊர்தியைப்பதிவு செய்து வினோதஉ டைப் போட்டிக்காக அலங்காரம் செய்து மைதானத்தின் நடுவேவரும் சிபிள்ளையயைப் பார்வையாளர்கள் பார்பது போல சீருடைகளை அணிந்த அணிந்த விழிகள் பார்த்த பார்வையைக் கடந்துவந்த கொதிப்பு இன்னும் அடங்கவில்லை.
ஊர்தி தன் வேகத்ததை குறைத்து மிருசுவில் சந்தியில் வண்ணம் போடப்பட்டிருந்த வெற்றுக் கொள்கலன்கலான தடையை வலமும் இடமுமாய் திரும்பிக் கடந்து வேகம் பிடித்தது. ஊர்தி கொடிகாமத்துக்கு போகும் முன்னரே நான் சாவக்கச்சேரிக்கு போய்விட்டிருந்தேன்.
அன்று நாங்கள் விட்டுச் சென்றது போலவா இன்றும் சாவக்கச்சேரி இருக்கும்? வீடுகள் உருமாறி…. வீதிகள் வடிவம்மாறி……. அந்த இடத்ததை நான்…….. அந்த இடத்ததை நான் அடையாளம் காணாமல் விட்டு விடுவேனோ? அடையாளம் தெரியாவிட்டால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு முன்பு நாங்கள் பயன்படுத்திய அதே வழியால் மதில்களை வேலிகளை கடந்து போனால், மிகச் சரியாகப் போய்ச்சேர்வேன்.
தமிழரசி இல்லாவிட்டால் இல்லாவிட்டால் மட்டும் தான் இந்த சிக்கல். நாலு நாளின் பின்னர் வருகின்றோம் என்று சொல்லிவிட்டு, திடீரென்று இன்று புறப்பட்டுவிட்டோம். எங்கு என்ன வேலையாக நிற்கின்றாளோ தெரியவில்லை. திடீரென்று சுயநினைவு வந்து வீதியைப் பார்த்தேன். அடையாளம் விளங்கவில்லை இது எந்த ரோடு? கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஆம் சரி.
தமிழரசியின் தளத்திற்கு போய்க்கொண்டு இருக்கிறோம். ஊர்தியை வீதியோரமாக நிறுத்தி விட்டு, கனிமகள் இறங்கி உள்ளே போய்க் கேட்டுவிட்டு உடனேயே வந்தாள்.
தமிழரசியக்கா காலையில் தீவுக்கு போய் விட்டாவாம். பின்னேரத்துக்கு இடையில் இஞ்ச வந்திடுவாவாம். என்ன செய்யலாம்? நாங்கள் இடங்களை பார்த்துக் கொண்டு போய் யாழ்ப்பாணத்துக்குள் நிப்பம். மத்தியானம் வரைக்கும் பாப்பம். தமிழரசி வராட்டா நாங்களே இடத்தைத் தேடுவம் என்றேன்.
கனிமகள் உள்ளே ஓடிப்போய்ச் சொல்லிவிட்டு வந்து ஊர்தியை எடுத்தாள். வேகத்தைக் கூட்டினாள். “மெதுவாகப்போ” வரும் போது மிக வேகமாக வந்ததில், கொடிகாமத்தில் ஆணையிறவு மாவீரர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவாலையத்தை காணவில்லை. ஒரு பக்க வெளிச்சுவர் மட்டுமே எஞ்சியிருப்பதாக அறிந்திருந்தேன். அவசரத்தில் அந்த சிறு சுவர் கண்களில் விழவில்லை. பார்க்கும் இடமெங்கும் படையினரின் தலைகளே. இவர்களின் முகத்தில் விழிக்காமல் யாரும் எந்த வேலையையும் செய்ய முடியாது போலுள்ளது.
இன்னும் ஒரு கொஞ்தூரம் போனால் மீசாலைப் பள்ளிக்கூடம் வரும். சூரியக்கதரிர் 02 நேரம் இதற்குள் நின்ற இராணுவத்தை வேவு பார்க்க லெப்.கௌதமியும் சேலையைக் கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக நடந்து போய். படையினரிடமே தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வந்தார்கள். அதன்பின் இப்போது தான் மீசாலையைப் பார்க்கிறேன். அன்று படையினர் நிற்க்கும் இடங்களை அறியாமல் கிளாலி நோக்கி நடந்துகொண்டிருந்த மக்களை படையினர் மீசாலையில் வைத்துத் திருப்பிக்கொண்டு இருந்தனர்.
சேலை கட்டியிருந்த முகுந்தாவும் கெளதமியும் மக்களோடு சேர்ந்து சாவக்கச்சேரி வரைநடந்து, கைவிடப்பட்டிருந்த எமது நிர்வாகத் தளத்தில் நின்ற மிதிவண்டியை எடுத்துக்கொண்டு படையினருக்குச் சுழித்தவாறு கொடிகாமத்தில் நின்ற மிதிவண்டியை எந்த பாதையால் வந்தார்கள் என்பதை அந்த நேரச்சண்டை நெருக்கடியில் கேட்க மறந்துவிட்டேன்.
அது ஒரு பெரிய விடயமா? கண்ணில் பட்ட ஒழுங்கைகளுக்குளெல்லாம் விட்டிருப்பார்கள்.
அட! அதற்க்குள் புத்தூருக்கு வந்துவிட்டோமோ? இந்தச் சந்தியில் தானே முல்லை வீரச்சாவடைந்தாள்? புத்தூருக்குப் படையினர் வந்துவிட்டதை எதிர்பாராத மோகனா ஊர்தியைச் சந்தியிலிருந்து ஒழுங்கைக்குள் திருப்பவும், பக்கவாட்டாக அடி விழுந்தது. ஊர்தியை விட்டு விட்டு ஆயுதத்தையும் தொலைத்தொடர்புக் கருவியையும் எடுத்துக்கொண்டு ஏனையவர்கள் புத்திசாலித்தனமாக தப்பி வந்துவிட்டார்கள்.
இன்னும் சில நிமிடங்களில் நிமிடங்களில் சாவக்கச்சேரி. என்னுடைய மனநிலையை என்ன மனநிலையை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. கட்டுப்படுத்த முடியாமல் அழுது விடுவேனோ என்று பயமாக இருந்தது.
ஓயாத அலைகள் 03 கட்டம் நான்கு. அப்போதும் நான் சாவக்கச்சேரிக்கும் வந்தேன். வந்த பாதைதான் வேறு. உடல் அலுக்காமல் விரையும் ஊர்தியில் இப்போது வருவதை விட கடலையும் காற்றையும் கிழித்தவாறு உப்பு நீர் முகத்தில் தெறிக்க் ஆயுதங்களை இறுக அணைத்தவாறு இருளில் வந்து கோயிலாக் கண்டியில் இறங்கிய பயணம் இதமானது. கரைவரை படகுகள் வரவில்லை. முழங்கால் அளவு ஆழநீரில் இறங்கி நீண்ட தூரம் நடந்தோம்.
ஒரு அணி கைதடியைப் பிடித்து நாவற்குழியைப் பிடிக்க இன்னொன்று அரியாலை, கொழும்புத்துறைவரை போக நாங்கள் மட்டுவில், கனகம் பளியடி, சாவக்கச்சேரி, தனங் கிளப்பு என்று பரந்து விரிய தென்மராட்சிச் சண்டை பெரிய சண்டை தான்.
சாவக்கச்சேரி நகரைக் கைப்பற்ற ஒரு நாள் முழுவதும் சண்டை நடந்தது. நகரத்தினுள் தம்மை பலமாக பலப்படித்தியிருந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்க்கக் கொடுத்த உயிர்கள்………………
எல்லோரும் நான்கு அல்லது ஐந்து குழுக்கள் கொண்ட குழுக்களாக பிரிந்து கொண்டோம் பாதைகளையும் பிரித்துக் கொண்டோம். லெப். கேணல் நிஸ்மியர், மேஜர் மாலதி, தமிழ்ச்செல்வி, ஜமுனா என்று எல்லா கட்டளை அதிகாரிகளின் குரல்களும் தொலைத் தொடர்பு கருவியில் எம்மோடு இணைய, கட்டிட காட்டினுள் மறைந்திருந்த படைகளோடு மிகக் கடுமையாக மோதினோம். ஆயுதங்களுக்கு தேவையான மேலதிக ரவைகளையும் கையெறி குண்டுகளையும் அளவு கணக்கின்றி சுமந்திருந்தோம். எதற்காகவும் யாரும் எமது முன்னேற்ற நடவடிக்கையை இடை நிறுத்த வேண்டிய தேவையிருக்கவில்லை. இப்படித் தான் சண்டை பிடித்தோம். சில இடங்களுக்கு எறிகணைகள் சில இடங்களுக்கு ஆர்.பி.ஜிகள் சில இடங்களில் இலகு இயந்திரத் துப்பாகிகள்…… நிலைமைக்கேற்ற முடிவுகளை நாமே எடுத்தோம்.
சாவக்கச்சேரி நகரின் கட்டளை அதிகாரியாக மேஜர் கயல்விழியே நின்று கொண்டாள். பட்டாலியன் கணக்கான இராணுவத்தினரின் ஆயுத முனைகளின் மத்தியில் சாவகச்சேரி தன்னுடைய ஒரு பிளாட்டுனை மட்டுமே வைத்துப் பாதுகாத்த கயல்விழி உண்மையிலேயே கெட்டிக்காரி தான்.
ஊர்தி சாவக்கச்சேரி இந்துக் கல்லூரியை நெருங்கிக் கொண்டிருந்தது. கண்கள் தனிச்சையாகவே இடது புறம் திரும்பின. ஆ! இதுதான். இந்த ஒழுங்கைதான். இது தான் எங்களின் காப்பரண் வரிசை இப்டியே யாழ் நெடுஞ்சாலையைக் குறுக்கறுத்து வலது புறம் வீடுகள் காணிகள் தலிகளுடே நீண்ட காப்பரண்வரிசை வளைந்து மாண்டான் வெளியின் விளிம்புகளுடாக கோப்பாய் கைதடி வெளியுடாக செம்மணிச் சந்தி என்று கொழும்புத்துறை கடற்கரை வரை நீளும். நெடுஞ்சாலையில் இருந்து வலது பக்கம் ஒரு கிலோ தூரத்தில் கயல்விழியின் கட்டளைக் காப்பரண். மதில் பாயாமல் போவதற்கு ஒரு பாதையுண்டு, கல்லூரியைக் கடந்து சந்திக்குப் போய் சந்தியிலிருந்து வலது பக்க ஒழுங்கை ஒன்றால் வளைத்து வளைந்து வளைந்து போனால் ஒரு கல் வீட்டு வாசலில் அந்த ஒழுங்கை முடியும். அந்த வீட்டுக்கு அடுத்த காணியில் ஒரு சின்ன மண் வீடு. மூன்று பற முள்ள பல வீடுகளின் மதில்களால் காணி வேலியிடப்பட்டிருந்தது. அந்தக் காணியில் தான் கயல்விழி நின்றாள்.
ஏன் அந்தச் சண்டை அப்படி நடந்தது? தப்பிவர வாய்பிருந்தும் ஏன் கயல்விழி அந்த முடிவை எடுத்தாள். சீ! அந்த இடத்தில நான் நின்றிருந்தாலும் அதே முடிவைத்தான் எடுத்திருப்பேன்.
மூவாயிரத்துக்கும் மேற்ப்பட்ட படையினர் அன்றைய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள். மூன்று மாதம் முன்னர் இழந்த நகரைப் பல தடவைகள் முயன்றும் மீளப் பிடிக்க முடியாமல் இழப்புகளோடு தோற்றோடிய வெறியுடன் படையினர் பேயாட்டம் போட்டனர். பல்குழல் பீரங்கிகளும், ஆட்லறிகளும் மட்டுப்படுத்தப் பட்ட பகுதியை இலக்கு வைத்து தாக்கின. ஓய்வேயில்லாது வெடித்துக் கொண்டிருந்த எறிகணைகளின் அதிர்வினுள் துப்பாக்கி வேட்டொலிகள் மூழ்கிப் போயின வானலையில் வந்த குரல்கள் நிலமையை தெளிவாக்கின.
“எங்களில் ஒராள் காயம்”
“ரெண்டு பேர் காயம்”
“நான் மட்டும் தனியே நிக்கிறன். சமாளிப்பம் சப்போட் அனுப்புங்கோ”
சில நேரங்களில் அமைதி மட்டுமே பேசியது. கயல்விழி தன்னுடைய ஆட்களைக் கூப்பிட்ட குரலுக்கு பதிலில்லாமல் போனது. எல்லோருக்குமே நிலமை விளங்கியது.
சப்போட்! உடனடி தேவை அது தான் எங்கிருந்து……. எப்படி?
கட்டளைப் பீடத்திற்கும் கயல்விழிக்குமான கடைசி உரையாடல் ஆரம்பமாகியது.
“என்ரை எல்லாப் பொஷிசனும் ஓப் ஆயிட்டுது. என்ரை இடம் மட்டும் தான் என்னிடம் இருக்கிறது. வலம் இடம் முன் பக்கமெல்லாம் ஆள் தான். எனக்கு பின் பாதை பிரச்சனையில்லை. சப்போட் அனுப்ங்கோ திருப்பிப் பிடிப்பம்”
கயல்விழியின் மென்மயான குரல் பிடிவாதத்துடன் பதிலளித்தது.
“விட்டால் திரும்பிப் பிடிக்கிறது கஷ்டம். நீங்க ரீமை நான் சொல்லுற பாதையில் இப்படியே அடிச்சுப் பிடிக்கலாம்.”
உண்மை தான் விட்டால் திரும்பிப் பிடிப்பது மிகச் சிரமம். ஆனால் அதற்காக அவசரத்தில் அருகிலிருக்கும் எந்த அணியையும் அப்டியே எடுத்து அனுப்பினால், அந்த வெற்றிடம் சண்டை ஒன்றும் இல்லாமலேயே பகைவரிடம் போகும்.
அரியாலையிலிருந்து ஒரு நாலு பேர் கொழும்புத்துறையிலிருந்து நாலு போர், அப்படியே வண்ணாத்தி பாலத்தடி, செம்மணி, மண்டானிலிருந்தெல்லாம் கொஞ்சப் கொஞ்சப் பேர் புறப்பட்டு வந்து ஒன்று சேர்ந்து, அணியாகி சாவகச்சேரிக்குள் நுழைவதற்க்குள்…… கயல்விழியையும் கூட இழக்க நேரிடும்.
பின்வாங்கி வருமாறு மறுபடி மறுபடி கட்டளை பீடம் பணித்ததை ஏற்றுக்கொள் கயல்விழி மறுத்துவிட்டாள்.
என்ரை கட்டளையை ஏற்றுச் சண்டை பிடிச்ச பிள்ளையால் தான் நான் சாவகச்சேரியை பிடிச்சனான். இண்டைக்கும் என்ரை ரீம், நான் சாவகச்சேரியை விடமாட்டேன் எண்ட நம்பிக்கையோடை தான் சண்டை பிடிச்சு விழுந்தி நான் சாவகச்சேரியை விடமாட்டேன் எண்ட நம்பிக்கையோட தான் சண்டை பிடிச்சு விழுத்திட்டுது. இந்த இடத்தை விட்டு நான் வரமாட்டேன். நீங்க சப்போட்டை அனுப்புங்கோ. அடிச்சுப் பிடிப்பம்.
அதன் பின்னரும் நிலைமையைத் தெரியப்படுத்திய வாறே தனித்து நின்று தன்னைச் சூழ்ந்து வந்த படையினரோடு சண்டை பிடித்துக்கொண்டிருந்த கயல்விழி வரவில்லை. ஒளிப்படக் கருவியோடு கூடவே நின்ற மலரினி வரவில்லை.
சாவக்கச்சேரி எம்மை விட்டு போனது.
அரசியற் பணிக்கென யாழ்ப்பாணத்துக்குள்ளே போன தமிழரசி எல்லா வீடுகளுக்கும் போனபோது அந்தக் கல் வீட்டுக்கும் போனாளாம். தாம் வந்த புதிதில் பக்கத்து காணி காப்பரணிலிருந்தும் மணம் வீசிக்கொண்டிருந்ததாக கல் வீட்டு அம்மா சொன்னாராம். மேற்புறம் பழுதடைந்த நிலையிலுள்ள காப்பரணை மதிலுக்கு மேலால் எட்டிப் பார்த்து விட்டு, தமிழரசி அனுப்பிய தகவல் தான் எமது பயணத்தின் ஆரம்பம்.
சண்டை நடந்து முழுதாக இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.
வித்துடல்கள் முழுதாகக் கிடைக்கப் போவதில்லை. எனினும், தமது கைக்குண்டுகளால் தம்மை அழித்துக் கொண்ட இருவரின் எச்சங்களும் காப்பரணுள் நிச்சயமாக இருக்கத்தானே வேண்டும்.
உடையின் சிறு துணிக்கை, ஒரு எலும்புத் துண்டு, ஆயுதத்தின், தோளிப்படக் கருவியினதோ மிச்சங்கள்….. ஏதேனும் எஞ்சியிராதா எடுத்து நாம் இறுதி மரியாதை செலுத்த.
– மலைமகள்.
போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்பபுதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்னோனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”