உறவை அணைத்த விழிகள்
வெற்றிலைக்கேணிக்யிலிருந்து ஆனையிறவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந் இராணுவம், கட்டைக்காட்டுத் தேவாலயத்துக்கருகில் தரித்து நின்றது. இராணுவத்தை இடைமறித்து எமது போராளிகள் நிலைகளை அமைத்து கண்விழித்துக் காத்திருந்தனர். எமது கண்மட்டும் விழித்திருக்கவில்லை; எமது துப்பாக்கிகளும் விழித்திருந்தன.
உன்ன உணவும், குடிக்க நீரும் இருந்தும் நேரம் இல்லாத நிலையில் எம்மவர், வரும் எதிரிக்கு அவ்விடத்தில் வைத்தே சமாதி கட்டுவோம் என்று மிக உறுதியாக நின்றனர்.
01.07.1991 அன்று, நித்திரை இலாத சிவந்த கண்களுடன் இருந்த போராளிகள் மீது எதிரியாவணன் கொடூரத் தாக்குதலைத் தொடுத்து, முன்னேறிக் கொண்டிருந்தான். எமது போராளிகளின் துப்பாக்கிகளும் சீறத் தொடங்கின. இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் நடந்து கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் “அக்கா !” ஒரு குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தேன். ஒரு ஆண் போராளி. நான் ‘என்ன?’ என்று கேட்க முதல் எனக்கருகில் இருந்த கோகிலாக்கா உற்று நோக்கிவிட்டு, ‘தம்பி!’ என்று அழைத்தார். இருவரும் கலங்கிய கண்களுடன் ஏதோ கதையைப் பரிமாறும் ஏக்கத்துடன், ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஆனால் அந்த அரக்கர்களின் அசுரக் குண்டுகளும் ‘பொம்மர்’ தாக்குதலும் விடவில்லை. கோகிலாக்கா ஏமாற்றத்துடன் தன்னுடைய ஆர்.பி.ஜி எல்.எம்.ஜியை அரக்கர்களுக்கு எதிராகப் பாவித்தாள்.
மீண்டும் அதே குரல், ‘அக்கா’ எதிரி முன்னேறிக்கொண்டிருந்ததனால் அவள் தன்னுடைய ஆர்.பி.ஜி எல்.எம்.ஜியின் ‘ரிகறில்’ இருந்து கைவிடாது, ‘தம்பி’ என்று கூப்பிட்டுவிட்டு, மீண்டும் எதிரியை வீழ்த்த்ஹும் முடிவில் இருந்தாள். ஒருகணம் ‘அக்கா’ என்றவன் ஏங்கிநிற்க அவளின் நெஞ்சைத் துளைத்துச் சென்றது ஒரு குண்டு. ஓடிவந்து தூக்கி, ‘அக்கா’ என்றான். அவளும் ஏதோ சொல்ல முனைந்தாள். என்னவென்று அறிய முதல் அவன் கால்களில் சாய்ந்து தமிழ் அன்னையின் மடியை முத்தமிட்டாள்.
அவள் வேறு யாருமில்ல, அந்த ஆண் போராளியின் (சகோதரி) அக்காவேதான். அவளை அவன் கண்டு நான்கு வருடங்கள் ஆகின்றன. அவள் இயக்கத்தில் இணைந்து 4வது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவள். அவளின் அன்பு வார்த்தை கேட்க வந்து ‘அக்கா’ என்றவன் அவள் தனக்கு முன்னே மடிந்ததைக் கண்டு அவளுகாகச் சில நிமிடம் தலை குன்னது மீண்டும் நிமிர்ந்து தனது துப்பாக்கியை இறுகப் பற்றிக்கொண்டான்.
தமிழீழ போர்க்களத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”