தமிழன்னையின் குழந்தைகள் இவர்கள்…..
“எல்லோருக்கும் பொது அன்னையான தமிழன்னை இந்தச் சிறுவர்களை தாயாக அரவணைத்திருக்கிறாள். எமது இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணைபிரியாத அங்கமாக இணைந்துள்ளனர். தனிக்குடும்பம்; அந்தக் குடும்பத்தைச் சுற்றிய உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்ப்புகளுக்கப்பால் ஒரு பரந்த வாழ்வையும், விரிந்த உறவுகளையும் வைத்துக்கொண்டு வளரப்போகும் இவர்கள், எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திகழ்வார்கள் என்பது திண்ணம்.
இந்தச் சமூகச் சூழலில் இவர்களிடம் மண்பற்றும், மக்கள் பற்றும் ஆழமாக வேரூன்றி வளரும். இத்தகைய நற்பண்புகளுடன் இவர்கள் கல்வியறிவு பெற்று இந்தத் தேசத்தின் நிர்மாணிகளாகவும் உருப்பெற்று எமது மக்களுக்குப் பெரும்பணியாற்றுவார்கள்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
“புலிகளின் தகாம் தமிழீழத் தாயகம்”