லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் மண்டைதீவு படைத்தளம் மீது 28.06.1995 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் சூட்டி, மேஜர் தமிழ்மாறன் / கஜேந்திரன், கப்டன் மாறன், கப்டன் எழிற்செல்வன் / ஜவான், லெப். அகிலன், லெப். உதயா, 2ம் லெப். இசையழகன், வீரவேங்கை பாமினி ஆகிய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் கடற்புலிகளின் தாக்குதல் அணிகள் துணையுடன் மண்டைதீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அங்கிருந்த சிறிலங்கா படைத்தளத்தைத் குறுகிய நேரத்தில் தாக்கியழித்து சிறிலங்கா படையினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
|| வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்….
லெப்.கேணல் சூட்டி (தம்பிமுத்து கோவிந்தராஜன் – அம்பாறை)
மேஜர் தமிழ்மாறன் (கஜேந்திரன்) (அரசரட்ணம் பாலகிருஸ்ணன் – தோப்பூர், திருகோணமலை)
கப்டன் மாறன் (குணநாயகம் குலேந்திரன் – அல்வாய், யாழ்ப்பாணம்)
கப்டன் எழிற்செல்வன் (ஜவான்) (செல்லப்பு தயாபரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அகிலன் (அருச்சுனன் சிவரதன் – பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உதயா (கந்தையா சித்திரகுமாரி – கண்டி, சிறிலங்கா)
2ம் லெப்டினன்ட் இசையழகன் (கிறிஸ்ரி) (கந்தையா கணேசமுர்த்தி – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை பாமினி (சின்னவன் நகுலேஸ்வரி – புத்தூர், யாழ்ப்பாணம்)
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”